அயலக மண்ணில் இருந்தாலும் இ-ஆபிஸ் வழியே அரசுக் கோப்புகளில் கையெழுத்திடும் முதல் மு.க.ஸ்டாலின்.  
தற்போதைய செய்திகள்

அயலக மண்ணில் இருந்தாலும் அரசுப் பணி தொடர்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அயலக மண்ணில் இருந்தாலும் அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபிஸ் வழியே அரசுப் பணிகள் தொடர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

அயலக மண்ணில் இருந்தாலும் அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபிஸ் வழியே அரசுப் பணிகள் தொடர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அமெரிக்க நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தின் போது, சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 17 நாள்கள் பயணங்களை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் வரும் 14 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில், அயலக மண்ணில் இருந்தாலும் அரசுப் பணிகள் தொடர்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன.

அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபிஸ்(e_office) வழியே பணி தொடர்கிறது... என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கோயில் அகற்றம்

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தாக்கிய தவெகவினா் 10 போ் மீது வழக்கு

பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

SCROLL FOR NEXT