மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 18,553 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 18,553 கன அடியாக சரிந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக,மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 19,618 கன அடியிலிருந்து வினாடிக்கு 18,553 கன அடியாக அதிக சற்று குறைந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 116.21 அடியிலிருந்து 116.12 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 87.41 டிஎம்சியாக உள்ளது.