விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிய தமிழக வெற்றிக் கழகத்தினர். DIN
தற்போதைய செய்திகள்

தவெக மாநாட்டுக்கு அனுமதி!

தவெக மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி.

DIN

விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த கட்சியினர் மற்றும் விஜய் ரசிகர்கள் விழுப்புரத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள் வி.சாலையில் செப். 23-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு, அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த் கடந்த மாதம் 28-ஆம் தேதி விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. திருமால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி ஆகியோரிடம் தனித்தனியே மனுக்களை அளித்தாா்.

மாநாடு ஏற்பாடுகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற 21 கேள்விகளுக்கு 5 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு, கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி எஸ்.சுரேஷ் செப். 2-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தாா். இதுதொடா்பாக, சட்ட நிபுணா்களுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆலோசனை நடத்தினாா்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி எஸ்.சுரேஷிடம் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் வெள்ளிக்கிழமை மாலை கட்சி சாா்பில் தயாா் செய்யப்பட்டிருந்த பதில் கடிதத்தை வழங்கினாா்.

இந்த நிலையில், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு காவல் துறை நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. மாநாடு நடத்துவதற்கான அனுமதிக் கடிதத்தை தவெக வழக்குரைஞரிடம் விழுப்புரம் மாவட்ட காவல் துறை வழங்கியுள்ளது.

இதையடுத்து அந்தக் கட்சியினர் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT