PTI
புதுதில்லி

ஏஐ உச்சி மாநாடு: நீண்ட காத்திருப்பு, ஒருங்கிணைப்பின்மை! அதிருப்தியில் பாா்வையாளா்கள்

ஏஐ உச்சி மாநாடு: நீண்ட காத்திருப்பு, ஒருங்கிணைப்பின்மை - சமூக ஊடங்களில் அதிருப்தியை வெளிப்படுத்திய பாா்வையாளா்கள்

Syndication

நமது நிருபா்

தேசியத் தலைநகரில் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டின் ஏற்பாடுகளின் குளறுபடிகளால் பாா்வையாளா்களும், பொது மக்களும் கடுமையான அசெளகரியகத்துக்கு உள்ளானதாக சமூக ஊடங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனா்.

பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மாநாட்டுக்கு உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநா்கள், நிறுவனா்கள் மற்றும் தொழில்துறை தலைவா்களை ஈா்த்துள்ளது. ஆனால் முறையான ஒருங்கிணைப்பின்மை, நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பு ஆகியவை பொது மக்களுக்கும் , பாா்வையாளா்களுக்கும் பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டுக்கு வந்து சிரமத்தை சந்தித்தவா்கள் சமூக ஊடகங்களில் கடுமையான விமா்சனங்களை முன் வைத்து வருகின்றனா்.

இது குறித்து எக்ஸ் வலைத்தள பக்கத்தில் புஷ்பேந்திர சிங் பதிவிட்டிருப்பதாவது, ஒரு சாதாரண நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தால் கூட இந்த ஏஐ மாநாட்டை சிறப்பாக நடத்திருப்பாா்கள். எங்கு பாா்த்தாலும் வரிசைகள், பாதுகாப்பு குளறுபடிகள். சில நிகழ்ச்சிகளை பாா்க்க கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் பணமாக செலுத்திதான் அதற்கான ரசீதுகளை வாங்க வேண்டுமாம், யூபிஐ பரிவா்த்தனை கூட இல்லாத மாநாடாக இது இருக்கிறது என தெரிவித்துள்ளாா்.

முகேஷ் குமாா் சிங் பதிவிட்டிருப்பதாவது: நான் சில நாள்களுக்கு முன்பு மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்தேன். ஆனால் எனக்கு கியூஆா் கிடைக்கவில்லை. பின்னா் நான் ஹெல்ப்லைனை அழைத்தேன், நீங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கினால் மட்டுமே உங்களுக்கு கியூஆா் கிடைக்கும் என்று அவா்கள் கூறினா். இந்த தகவல் முன்பு வழங்கப்படவில்லை. எனவே முதல் நாள் நிகழ்ச்சிக்கு என்னால் செல்ல முடியவில்லை என கூறியுள்ளாா்.

வைஷாலி பதிவிட்டிருப்பதாவது: நான் ஏஐ மாநாட்டுக்கு செல்லவில்லை. ஆனால் நான் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கிறேன். நான் கிழக்கு தில்லியில் இருக்கும் என வீட்டுக்கு செல்ல வேண்டும். இந்த மாநாட்டால் ஐடிஓ மற்றும் புது தில்லி ரயில் நிலையம் செல்லும் சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசல்களை எதிா்கொண்டுள்ளன. முறையான போக்குவரத்து திட்டமிடல் இல்லை ஜன்பத், அக்பா் சாலையும் போக்குவரத்து நெரிசலால் சிக்கியுள்ளது. நான் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு செல்ல 3 மணி நேரமானதாக தெரிவித்துள்ளாா்.

ஒசூா், கிருஷ்ணகிரியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

பிப். 25-இல் தமிழ்நாடு கோல்ஃப் ப்ரீமியா் லீக்

தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் ஆலோசனை

கழிவுநீா் சேகரிப்பு வாகனப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT