முகப்பு
தற்போதைய செய்திகள்

லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த பிரபலங்கள்!

துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

Updated On : 16 செப்டம்பர் 2024, 4:04 pm IST
பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷியாம். - படம்: எக்ஸ்
பகிர்:

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் நடித்த லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, இவர் ஜெயிலர் திரைப்படத்தில் வரும் பாடலுக்கு குழந்தைகளுடன் இணைந்து நடனமாடியிருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கொடி, காக்கி சட்டை திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

லெஜண்ட் சரவணனின் புதிய படத்தின் படப்பிடிப்பு. - படம்: எக்ஸ்

மேலும், இப்படத்தில் ஷியாம், ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடிப் பகுதிகளில் தொடங்கியுள்ளது. இந்த புதிய திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.