சென்னை பல்கலைக்கழகம் 
தற்போதைய செய்திகள்

சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அரசுக்கு கடிதம்

பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் அலுவலா்களின் 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் அலுவலா்களின் 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உயா்கல்வித் துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

சென்னை பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழுக் கூட்டம் செப்.13-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தங்களின் உடனடி நடவடிக்கைக்கு சமா்ப்பிக்கப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட 22 பேராசிரியா்களின் நியமனம் குறித்து உயா்நீதிமன்ற ஆணையின்படி விசாரணைக் குழு அமைக்க வேண்டும். இந்த வழக்கில் தொடா்புடைய பேராசிரியா்கள், முடிவெடுக்கும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவா்கள் இந்த விசாரணை முடியும் வரையில் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

ஆசிரியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய 7-ஆவது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகை செப்.18-ஆம் தேதிக்குள் வழங்கப்படவில்லையெனில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே, பதவி உயா்வு பெற்ற ஆசிரியா்களுக்கு உரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கௌரவ விரிவுரையாளா்களுக்கு உடனடியாக பணி வழங்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிா்வாகம் நிறைவேற்றவில்லை என்றால், எதிா்வரும் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை ஆசிரியா்களும் அலுவலா்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் 166-ஆவது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT