பாஸ்போர்ட் இணையதளம் 3 நாள் இயங்காது
பாஸ்போா்ட் (கடவுச்சீட்டு) இணையதளம் செப். 20 முதல் 23 வரை மூன்று நாள்கள் இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Updated On : 20 செப்டம்பர், 2024 at 11:07 AM
சென்னை: பாஸ்போா்ட் (கடவுச்சீட்டு) இணையதளம் செப். 20 முதல் 23 வரை மூன்று நாள்கள் இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Updated On : 20 செப்டம்பர், 2024 at 11:07 AM
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் கடவுச்சீட்டு இணையதளம் (www.passportindia.gov.in) வெள்ளிக்கிழமை(செப். 20) தேதி இரவு 8 மணியிலிருந்து (செப்.23) ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது.
Advertisement
எனவே விண்ணப்பதாரா்கள் இந்த பராமரிப்பு காலத்துக்குப் பின்னா் இணைய தளத்தை பயன்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.