தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ள சிலிண்டர். படம்: ஏஎன்ஐ
தற்போதைய செய்திகள்

தண்டவாளத்தில் சிலிண்டர்... தொடரும் ரயில் கவிழ்ப்பு முயற்சி!

உத்தரப் பிரதேசத்தில் ரயிலை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி பற்றி...

DIN

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டரை மர்ம நபர்கள் வைத்துள்ளனர்.

இன்று(செப். 22) காலை 5.50 மணிக்கு கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ்-க்கு சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்த நிலையில், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

இதனை அறிந்த ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்தி, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் எரிவாயு சிலிண்டரை தண்டவாளத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.

ரயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் ஆய்வு செய்ததில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்தது காலியான 5 லிட்டர் எரிவாயு சிலிண்டர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்வே தண்டவாளங்களில் இரும்பு ஆணி, எரிவாயு சிலிண்டர், சிமெண்ட் கற்கள், இரும்புக் கம்பி போன்றவற்றை வைத்து ரயிலை கவிழ்ப்பதற்கான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT