ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் வாக்களித்த பெண்கள். படம்: ஏஎன்ஐ
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு.

DIN

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

கடும் குளிர் மற்றும் பனி இருந்தபோதிலும், ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி, 54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.

ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா், புத்காம், கந்தா்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை மேம்படுத்தி பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக காவல் துறை, ஆயுதக் காவல்படை, மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளை சோ்ந்த அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர்.

ஜம்மு-காஷ்மீா் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிகட்ட தோ்தல் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு, அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT