சென்னையில் புதன்கிழமை இரவு இடைவிடாமல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
தற்போதைய செய்திகள்

சென்னையில் பெய்த கனமழை: பல இடங்களில் வெள்ளம், விமானங்கள் சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

DIN

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (செப்.26) முதல் அக்.1- ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் மழை பெய்து, இரவு வரை நீடித்தது. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதன்கிழமை காலை 8.30 முதல் வியாழக்கிழமை காலை 5.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 7.42 மி.மீ மழையும், மேனம்பாக்கத்தில் 7.12 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் புதன்கிழமை இரவு மழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த மழையில் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தில்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து வந்த 12 விமானங்கள் தரையிறங்க மிகவும் தாமதமானால் திருச்சி - சென்னை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 8.0 மி.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி வானிலை நிலையத்தில் 5.0 மி.மீ மழையும், கடலூரில் 0.2 மி.மீ மழையும், வேலூரில் 0.4 மி.மீ மழையும், புதுச்சேரியில் 0.3 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, தெலங்கானாவில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வட மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு மாவட்டங்கள் மற்றும் ஜங்கவுன், காமரெட்டி, சித்திபேட், வாரங்கலின் சில பகுதிகளில் வியாழக்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் தெலங்கானாவில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் வெள்ளிக்கிழமை நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT