குடிநீர் வரி செலுத்துவோர் கவனத்துக்கு... ஊக்கத்தொகை அறிவிப்பு!
அக். 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை.
குடிநீர் வரியினை அக். 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை கிடைக்கும் சென்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகரத்துக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வசதி பெற்றவர்கள் 2024-25 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர்/ கழிவு நீர் வரியினை 01.10.2024 முதல் 30.10.2024-க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை கிடைக்கும் என்றும், அதிகபட்சமாக ரூ.1,500 வரை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ஆன்லைன் மூலமாகவும் சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்திலும் குடிநீர் வரியைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.