கடலூர் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்ட தனியார் மற்றும் அரசுப் பேருந்து 
தற்போதைய செய்திகள்

கடலூர் அருகே தனியார்- அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல்: 20 பேர் காயம்

கடலூர் அருகே தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் காயமடைந்தனர்.

DIN

சிதம்பரம்: கடலூர் அருகே தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 6 மணிக்கு கடலூரில் இருந்து குள்ளஞ்சாவடி செல்வதற்காக வந்த தனியார் பேருந்தும், ஆலப்பாக்கம் மேம்பால இறக்கத்தில் இடது புறமாக இணைப்புச் சாலையில் திரும்பிய போது, அதே வழியில் கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தும் (எஸ்இடிசி) பின்புறமாக தனியார் பேருந்து மீது மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த சாத்தப்பாடியைச் சேர்ந்த உதயகுமார், பூண்டியாங்குப்பம் அமிர்தவல்லி, தமிழரசி, வீரக்குமார், குள்ளஞ்சாவடி பச்சையப்பன் உள்பட 20 பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை.

காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT