சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீசுப்ரமணியர் பங்குனி உத்திரத் தேரோட்டம். 
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஸ்ரீசுப்ரமணியர் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டியநாயகம் (சுப்ரமணியர்) கோயில் பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

DIN

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டியநாயகம் (சுப்ரமணியர்) கோயில் பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே அமைந்துள்ள பாண்டிநாயகம் கோயிலில் பங்குனி உத்திர உற்சவம் கடந்த ஏப் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் மூலவருக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்று வந்தன.

பங்குனி உத்தர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கீழவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகளை வலம் வந்து தோ்நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

உற்சவத்தை முன்னிட்டு, லட்சார்ச்சனை நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

SCROLL FOR NEXT