நேபாள நாட்டில் மீண்டும் மன்னராட்சி வேண்டி நடைபெற்ற போராட்டத்தின் முக்கிய தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாள நாட்டில் மீண்டும் மன்னராட்சி ஏற்படுத்த வேண்டி முன்னாள் அரசரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் ஏராளமானோர் படுகாயமடைந்ததுடன் 2 பேர் பலியாகினர்.
இந்நிலையில், தலைநகர் காத்மாண்டு மற்றும் தின்குனே ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் முக்கிய தலைவரான துர்கா பிரசாய் என்பவரை இந்திய எல்லையின் அருகில் அமைந்துள்ள அந்நாட்டின் ஜாபா மாவட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், துர்கா பிராசய் இந்தியாவின் அசாம் மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாபா மாவட்டத்தில் நேபாள காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் மீது அரசுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் ஒருங்கிணைந்த குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சுமார் 240 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மன்னராட்சி அழிக்கப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு மக்களாட்சி நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அந்நாட்டில் மீண்டும் அரசாட்சி நிறுவப்பட்டு நேபாளத்தை இந்து தேசமாக மாற்ற வேண்டுமென ராஷ்டிரிய பிரஜதந்த்ரா கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.