ஜல்லிக்கட்டுப்போட்டியை தொடங்கி வைத்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தெய்வானை.  
தற்போதைய செய்திகள்

தேனிமலை‌ சுப்பிரமணியர் கோயில் ஜல்லிக்கட்டு விழா

பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை‌ சுப்பிரமணியர் கோயில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.

DIN

பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை‌ சுப்பிரமணியர் கோயில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை‌ சுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுப்போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு)தெய்வானை தொடங்கி வைத்தார். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

தொடர்ந்து திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 800 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 250 மாடு பிடி வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். காளைகளை சிறந்த முறையில் அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT