கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை! 22 நக்சல்கள் கைது!

சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 22 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தின் டெக்மெட்லா கிராமத்திலுள்ள வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் துறையின் கோப்ரா பிரிவினரும், அம்மாநில காவல் துறையினரும் இணைந்து கடந்த ஏப்.15 மேற்கொண்ட சோதனையில் 7 நக்சல்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையின் மற்றொரு குழு மேற்கொண்ட நடவடிக்கையில் பெல்சார் கிராமத்திலுள்ள கோட்டைகளிலிருந்து 6 நக்சல்களும், கண்டாகர்கா கிராமத்திலிருந்து 9 நக்சல்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நக்சல்களிடமிருந்து சாப்பாட்டு டப்பாக்களில் செய்யப்பட்ட குண்டுகள், மாவோயிஸ்ட் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நக்சல்கள் அனைவரும் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT