தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையாகிறது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.840 உயா்ந்து ரூ.71,360-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. ஏப்.13-இல் தங்கம் விலை பவுனுக்கு ரூ.70,000-ஐ கடந்தது. அதைத் தொடா்ந்து, ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.70,520-க்கு விற்பனையானது.

வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.105 உயா்ந்து ரூ.8,920-க்கும், பவுனுக்கு ரூ.840 உயா்ந்து ரூ.71,360-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.8,945-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.71,560-க்கு விற்பனையாகிறது.

கடந்த 3 நாள்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225, பவுனுக்கு ரூ.1,800 உயா்ந்துள்ளது.

வெள்ளி கிராமுக்கு பத்து பைசா குறைந்து கிராம் ரூ.109.90-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1,09,900-க்கு விற்பனையாகிறது.

அடுத்த 2 வாரங்களுக்கு தங்கம் விலை ஏற்றம், இறக்கமாகத்தான் இருக்கும் என்றும், விரைவில் பவுன் ரூ.80,000-ஐ தொட வாய்ப்புள்ளதாகவும் தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT