பங்குச்சந்தை இன்று(ஏப். 28) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,343.63 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12:20 மணியளவில், சென்செக்ஸ் 1,009.42 புள்ளிகள் அதிகரித்து 80,221.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 288.75 புள்ளிகள் உயர்ந்து 24,328.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் பெற்றுள்ளன.
அதேநேரத்தில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எச்.சி.எல். டெக், எடர்னல், நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.8 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 0.5 சதவீதமும் உயர்ந்தது. ஐடி தவிர மற்ற அனைத்துத் துறைகளும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.