ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26 இல் தமிழகம் வருவதாக இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்திற்கு வரவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் முதல் வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
Advertisement
Advertisement
இதையடுத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாகவும், தமிழகம் வரும் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்தபடி, நாட்டு மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலையில் மோடி உரையாற்ற இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்திற்கு வரவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் முதல் வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால், திருவண்ணாமலை, சிதம்பரம் கோயிலிலுக்கு வருவதாக இருந்த மோடி பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அக்டோபர் முதல் வாரத்தில் மோடி தமிழகம் வர திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் பயணத் திட்டம் குறித்து இந்த மாத இறுதியில் பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Prime Minister Narendra Modi was scheduled to visit Tamil Nadu on August 26, but reports have emerged that his visit has been canceled.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.