முகப்பு
செய்திகள்

மேற்கு வங்கத்தில் முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி - புகைப்படங்கள்

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, சுவேந்து அதிகாரிக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பகிர்:
பிரிகேட் அணிவகுப்பு திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில், ​​பங்கேற்ற மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர். - Manvender Vashist Lav
மேற்கு வங்கத்தின் பாரதீய ஜனதா கட்சியின் முதல் முதல்வராக சுவேந்து அதிகாரி உடன் பிரதமர் மோடி.
முதல்வர் சுவேந்து அதிகாரி உடன் பிரதமர் நரேந்திர மோடி. - xsm
பதவியேற்பு விழாவில் முதல்வர் சுவேந்து அதிகாரி-யை வாழ்த்திய பிரதமர் மோடி. - xsm
பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்தபோது, ​​நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூருக்குப் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி. - Swapan Mahapatra
பதவியேற்பு விழாவின் போது, ​​மூத்த பாஜக தொண்டர் மாகன்லால் சர்காரை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி. - Manvender Vashist Lav
மேற்கு வங்கத்தில் முதல்வராக சுவேந்து அதிகாரியை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்திய நிலையில், அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கி வாழ்த்து தெரிவித்தாா்.
முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் அமைச்சர்களாகப் பதவியேற்ற திலீப் கோஷ், அக்னிமித்ர பால், அசோக் கீர்தானியா, க்ஷுத்திரம் துடு மற்றும் நிசித் பிரமானிக் ஆகியோர். - Manvender Vashist Lav

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.