அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 
தற்போதைய செய்திகள்

அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை

இணையதளச் செய்திப் பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள உலகளாவிய வரி விதிப்புகளில் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், தனது அதிகாரத்தை மீறி அவசர சட்டங்கள் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் பிற நாடுகள் மீது வரிகளை விதித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், நாடுகள் மீது விதிக்கப்பட்ட அனைத்து வரிகளும் நடைமுறையில் இருக்கும் என்று உறுதிப்படுத்தினார்.

"வரி விதிப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் பாரபட்சமானது, தவறானது. ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

மேலும், இந்த வரிகள் நீக்கப்பட்டால் அது நாட்டிற்கு ஒரு பெரும் பேரழிவாக இருக்கும். அது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும், நாம் வலுவாக இருக்க வேண்டும்," என்று கூறிய டிரம்ப், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்துப் போராடுவேன் என கூறியுள்ளார்.

As one of the federal appeal courts in the US ruled that most of tariffs imposed by Trump administration are not accordance with the laws

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

"வரிகள் நீக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு பேரழிவு!": Trump எச்சரிக்கை! | Tax | Federal Court of US

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT