சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான இடைநீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 7.9.2021 இல் முதல்வர் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவித்ததன் அடிப்படையில், அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி,
இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் நாளில் இடைநீக்கம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், இதனை தவிர்க்கும் விதமாக, விதிகளை திருத்தி அமைக்கப்பட்டு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை விரைவாக முடிவு செய்யவதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியர்கள் உரிய நாளில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள்; குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடைந்தபிறகே பணப் பலன்களைப் பெற முடியும்.
இந்த அரசாணையால், ஓய்வு பெறும் நாளில் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதால் ஏற்படும் சலுகைகள் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே நடவடிக்கையை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.