தீபம் 
தற்போதைய செய்திகள்

தீபத்திருவிழா: தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும்!

எந்தவொரு நல்ல காரியத்தையும் நாம் தொடங்குவதற்கு முன்பு நாம் செய்யக்கூடிய முதல் காரியம் தீபம் ஏற்றுதல்...

இணையதளச் செய்திப் பிரிவு

எந்தவொரு நல்ல காரியத்தையும் நாம் தொடங்குவதற்கு முன்பு நாம் செய்யக்கூடிய முதல் காரியம் விளக்கு, தீபம் ஏற்றுதல்.

எங்கு ஓளி இருக்கிறதோ அங்கு இருள் மறைந்துவிடும். இருள் மறைந்து அந்த இடத்தில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறதோ அதேபோன்று தீபம் ஏற்றி வழிபடுகிறபோது நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய இருள் மறைந்து நமக்குள்ளே ஞான ஓளி பிறக்கின்றது. தீப ஒளியால் நலம் பெற்றவர்கள் ஏராளம்.

தமிழ்நாட்டில் காா்த்திகை தீபத்தன்று மாலைப் பொழுதில் வீடுகள்தோறும் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதைப் பாா்க்கலாம். இதற்கு காரண காரியம் கூறப்படுகிறது. தீப மங்கள ஜோதி நமோ நம என்பது திருப்புகழ்.

இன்றைய நாள் வீடுகளில் தீபம் ஏற்றுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும், எந்த எண்ணெயால் தீபம் ஏற்ற வேண்டும், எந்த விளக்கு ஏற்ற வேண்டும், எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், எந்த திசை நோக்கி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு இந்த பதிவில் பார்ப்போம்.

முகமும் பலனும்

ஒரு முகம் என்கிற ஏகமுகம் ஏற்றினால் நினைத்த காரியம் கை கூடும். இருமுகம் ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை தவழும். மூன்று முகம் ஏற்றினால் புத்திர பாக்கியம் உண்டாகும், நான்கு முகம் ஏற்றினால் கால்நடை வளங்கள் சேரும். ஐந்து முகம் ஏற்றினால் சகல நலன்களும் உண்டாகும்.

எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்?

காமாட்சி விளக்கு போன்ற ஒரு முகம் கொண்ட விளக்கை ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றினால் துன்பம் விலகும். குடும்பம் அபிவிருத்தி ஆகும். கிழக்கு - எல்லா கிரக தோஷங்களையும் நீக்கும், மேற்கு - கடன் தொல்லை, ஆயுத தோஷம், பங்காளி பகை, சனி பீடை ஆகியவை நீக்கும், வடக்கு- திருமண தடை அகற்றும், கல்வியும், செல்வமும் வளரும், தெற்கு- அமங்கலமும், அபசகுணமும் தரும் எனவே தெற்கு பாா்த்து விளக்கு ஏற்றக்கூடாது.

எந்த வகையான எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்?

சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். எதை வேண்டி தீபம் ஏற்றுகிறமோ அந்த செயல் நிறைவேறும். நல்லெண்ணெய் ஆரோக்கியத்தை அளிக்கும். தேங்காய் எண்ணெய் வசீகரத்தை உண்டு பண்ணும். இலுப்பை எண்ணெய் சகல காரியத்திலும் வெற்றியை பெற்றுத் தரும். விளக்கெண்ணெய் புகழ் உண்டாக்கும். வேப்ப எண்ணெய் - கணவன் - மனைவி ஒற்றுமை மேலோங்கும். ஐந்தும் சேர்த்து ஏற்றக்கூடிய பஞ்ச கூட்டு எண்ணெய்யால் தெய்வ அருளையும், குலதெய்வ அருளையும் ஒருசேர பெற்று தரும்.

சூரிய காந்தி எண்ணெய், கடலை எண்ணெய், சுட்ட எண்ணெயைப் பயன்படுத்தக் கூடாது.

எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெயால் தீபம் ஏற்ற வேண்டும்?

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய்யால் விளக்கு ஏற்றினால் நற்பலன்கள் கிடைக்கும். மகாலட்சுமிக்கு நெய் தீபமும், குலதெய்வத்திற்கு வேம்பு, இலுப்பை, நெய் ஆகியவற்றை கலந்து தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகியவற்றாலும், சிவன், முருகன், பெருமாள் ஆகிய பிற தெய்வங்களுக்கு பஞ்ச கூட்டு எண்ணெய் மற்றும் நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

திரியும் பலனும்

இன்ன திரியை விட்டு விளக்கேற்றினால் இந்த வகையான பலன் கிடைக்கும் என்று புஷ்ப விதி போன்ற நூல்கள் சொல்கின்றன. பஞ்சுத் திரியைப் பயன்படுத்தினால் குடும்பம் சிறக்கும், வீட்டில் மங்கலம் நிலை பெற்றிருக்கும். தாமரைத் தண்டிலான திரியைப் பயன்படுத்தினால் சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் தொலையும், நிலைத்த செல்வம் நிலைக்கும். வாழைத்தண்டு திரியைப் பயன்படுத்தினால் முன்னோர்களின் சபம் நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும், தெய்வ குற்றம் நீங்கி மன அமைதி கிட்டும். வெள்ளை எருக்கன் பட்டை திரியைப் பயன்படுத்தினால் பெரும் செல்வம் சேரும், புதிய மஞ்சள் துணியிலான திரியைப் பயன்படுத்தினால் நோய் நீங்கும். புதிய சிவப்பு நிற துணியிலான திரியைப் பயன்படுத்தினால் திருமணத் தடைகள் நீங்கும், மலட்டுத்தன்மை நீங்கும், செய்வினை தோற்றமும் விலகி ஓடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வெள்ளை நிற துணிலான திரியைப் பயன்படுத்தினால் தரித்திரம் நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். சனீஸ்வரனுக்கு கருப்பு துணியில் எள்ளை மூட்டையா கட்டி நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்ற வேண்டும்.

எந்த விளக்குகளில் தீபம் ஏற்ற வேண்டும்?

மண்ணினால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றினால் பீடைகள் நீங்கி மகத்துவங்கள் அதிகரிக்கும், தெய்வ அருள் கிட்டும். அகல் விளக்கு ஏற்றினால் துன்பங்கள் அகலும். வெள்ளி விளக்கேற்றினால் நல்ல காரியங்கள் அதிகம் நடைபெறும், மகாலட்சுமி அருள் கிட்டும். பஞ்சலோக விளக்கு ஏற்றுவதற்கு பலன் அதிகம் கிடைக்கும், தேவதைகள் வசீமாவர்கள் வெண்கலத்தில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் மேம்படும். இரும்பினால் தீபம் ஏற்றினால் சனி கிரகதோஷம் நீங்கும். வெள்ளிக்கிழமை தோறும் கோயிலில் லட்சுமி சன்னதியில் விளக்கு ஏற்றினால் லட்சியங்கள் நிறைவேறும்.

தீபத்தை மலர் கொண்டு குளிர வைக்க வேண்டும். தானாக விளக்கை குளிர விடக்கூடாது.

இல்லத்தில் எந்த நாளும் காலையும் மாலையும் தீபம் ஏற்று வழிபடுவது நல்லது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் மகா தீபம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது ஏற்றப்படுகிறது.

இன்று மாலை 6 மணிக்கு குறைந்தபட்சம் 27 தீபம் ஏற்ற வேண்டும். முதலில் வாசலில் தீபம் ஏற்றிவிட்டு பின்னர் வாசலில் இருந்து தீபத்தை வீட்டிற்குள் கொண்டு பிரதான விளக்கை ஏற்ற வேண்டும். பிரதான விளக்கு நெய் கொண்டு ஏற்றுவது நலம். பின்னர் மண்ணினால் செய்யப்பட்ட சின்ன சின்ன விளக்குகள் கொண்டு நல்லெண்ணெய் கொண்டு வீடு முழுவதும் தீபம் ஏற்றி இறைவன் அருள் பெறுவோம்.

Karthigai Deepam festival 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய கண்ணோட்டத்தில் உலகைச் சுற்றி 2025 - புகைப்படங்கள்!

ஐயப்ப பக்தா்கள் ரயில்களுக்குள் கற்பூரம் ஏற்ற தடை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்து மதத்தில் எத்தனை கடவுள்? ரேவந்த் ரெட்டி கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூரில் மிக கனமழை!

ஊழியர்கள் பற்றாக்குறை? இண்டிகோவின் 70 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT