சிதம்பரம்: கடலூர் மாவட்ட மீனவர்கள் வியாழக்கிழமை(டிச.4) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில்,
வங்கக் கடலில் வானிலை மாற்றம் காரணமாக அதிகமான காற்றின் வேகம் மற்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் வியாழக்கிழமை(டிச.4) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான விசைப்படகுகள் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள், கட்டு மரங்களில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கல் கடலுக்குச் செல்வார்கள் என்பதால், மீன்வளத்துறை எச்சரிக்கை முன்கூட்டியே மீனவர்களுக்கு விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.