தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.  
தற்போதைய செய்திகள்

இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.96,320-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டிருக்கும் தங்கம் விலை, இந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,160-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராம் ரூ.12,000-க்கும், பவுன் ரூ.96,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,040-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.96,320-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.199-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயர்ந்து ரூ.1.99 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Gold prices surged today: How much did it rise per sovereign?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் டிச.12 வரை மிதமான மழை!

மம்மூட்டியின் களம்காவல்! கேரளத்தில் கூடுதலாக 100 திரைகள் ஒதுக்கீடு!

கார்த்திகை தீபம் காவி தீபமாகிவிடக் கூடாது என்பதில் அரசு கவனம்! கோவி. செழியன்

20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா..! இரண்டு அணியிலும் மாற்றங்கள்!

கட்சியை அபகரிக்க போலி ஆவணங்கள்? அன்புமணி மீது ராமதாஸ் புகார்!

SCROLL FOR NEXT