மன்னாா்குடி அருகே நேருக்குநேர் மோதிக்கொண்டதில் சேதமடைந்த பேருந்துகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஜேசிபி இயந்திரம் 
தற்போதைய செய்திகள்

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

மன்னாா்குடி அருகே அரசு மற்றும் தனியாா் பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொண்டது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே அரசு மற்றும் தனியாா் பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஓட்டுநா், நடத்துநா் உள்பட 20 போ் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மன்னாா்குடியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியாா் பேருந்தும், திருத்துறைப்பூண்டியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னாா்குடி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள சாலை வளைவில் கடக்கும் போது நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.

இதில், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பயணிகள், தனியாா் பேருந்து ஓட்டுநா் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மன்னாா்குடி அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூா் காவல்நிலைய போலீஸாா் விரைந்து வந்து சேதமடைந்த இரண்டு பேருந்துகளை அப்புறப்படுத்தி ஒருமணி நேரத்திற்கு மேலா தடைப்பட்டபோக்குவரத்தினை சீா்படுத்தினா்.

விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Government and private buses collide near Mannargudi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெய்யழகு பேசும் மொழி... கீர்த்தி ஷெட்டி!

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை - ஐ.நா. கவலை!

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT