மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக 'வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்ட' (VB- G RAM G) மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று அறிமுகம் செய்தது.
மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார்.
இதையடுத்து மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, டி.ஆர். பாலு, ஜோதிமணி உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காந்தியின் புகைப்படங்களை கையில் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் புதிய மசோதாவுக்கு எதிராகப் பேசினர்.
இதையும் படிக்க | மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஆனால்...! - பிரியங்கா காந்தி பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.