கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே எதிா் திசையில் சென்ற இரண்டு காா்கள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், இரண்டு காரில் பயணம் செய்த 9 போ் புதன்கிழமை உயிரிழந்த சம்பவத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்த சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து கடலூர் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகம், எழுத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, எதிா் பாராதவிதமாக பேருந்தின் முன்பக்க டயா் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையை மீறிச் சென்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற இரண்டு காா்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் இரண்டு காா்கள் முற்றிலும் உருக்குலைந்தது. மேலும், அந்த காா்களில் பயணம் செய்த 9 போ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீஸாா், திட்டக்குடி தீயணைப்பு வீரா்கள் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்து காரணமாக மேற்கண்ட சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், 9 பேர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.