மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து 
தற்போதைய செய்திகள்

மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து!

மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஆறு விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்ரீநகர்: மோசமான வானிலை மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தில் புதன்கிழமை ஆறு வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீநகர் விமான நிலைய அதிகாரிகள் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

ஜம்மு மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஒரு இண்டிகோ, மூன்று ஏர் இந்தியா மற்றும் ஒரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு ஸ்பைஸ்ஜெட் விமானம் செயல்பாட்டு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் தங்கள் விமான பயணத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், பயணிகள் மீண்டும் முன்பதிவு மற்றும் உதவிக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், புதுப்பிப்புகள் கிடைத்தவுடன் பயணிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி என்று ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பட்டியலுடன் கூடிய அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நகரில் நிலவிய அடர் பனிமூட்டம் காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டது. அடர் பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த 60 விமானங்கள் மற்றும் புறப்படவிருந்த 58 புறப்பாடுகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் பனிமூட்டம் காரணமாக தில்லிக்குச் செல்லவிருந்த 16 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

A total of six arrivals and departure flights at Srinagar Airport in Jammu and Kashmir were cancelled on Wednesday due to adverse weather conditions and operational issues, airport authorities said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே நாளில் நிறைவடையும் இரு தொடர்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

குடியரசு நாள் அணிவகுப்பில் முதல்முறையாக ராணுவத்தின் கால்நடைப் பிரிவு!

எஸ்ஐஆர், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள்! - இபிஎஸ் அறிவுறுத்தல்

இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் 4 பேர்! யார் இவர்கள்?

SCROLL FOR NEXT