மகா கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடல். 
தற்போதைய செய்திகள்

மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடல்.

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது.

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.

பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர்.

இதையும் படிக்க: எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடன் தள்ளுபடி

இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

இந்தச் சூழலில், வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 2.33 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினர்.

மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய மேலும் 2 சிறப்பு நாள்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. 45 நாள்களுக்கு நடைபெறும் மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் முடிவடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முயற்சியே வலிமை!

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

விளையாட்டில் அரசியல் !

SCROLL FOR NEXT