தற்போதைய செய்திகள்

ஈரோடு கிழக்கில் பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்...

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவான நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி என இருமுனைப் போட்டி நிலவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 31 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 46 போ் களத்தில் உள்ளனா்.

திமுக ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இடைத்தோ்தல் என்பதும், பிரதான எதிா்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும்கட்சியான பாஜக ஆகிய பிரதான கட்சிகள் தோ்தலில் போட்டியிடாத நிலையிலும், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தை பெறவேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா். அவர்களுக்கு வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஒன்பது வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT