குடும்பத்தினருடன் வாக்களித்துவிட்டு கைவிரல் மை அடையாளத்தை காட்டிய திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா்.  
தற்போதைய செய்திகள்

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்!

திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் கடந்த பிப். 5 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 30,798 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 6,014 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். நோட்டாவுக்கு 1,204 வாக்குகள் கிடைத்துள்ளன.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதையொட்டி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் அவர்கள் திமுகவின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT