பாஜக (கோப்புப் படம்) 
தற்போதைய செய்திகள்

தில்லியின் அடுத்த முதல்வர் யார்? பாஜக இன்று ஆலோசனை!

தில்லியின் அடுத்த முதல்வர் குறித்த ஆலோசனையில் பாஜக.

DIN

தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றியடைந்துள்ள நிலையில், தில்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக இன்று(பிப். 9)ஆலோசனை நடத்தவுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பலரும் அதிா்ச்சித் தோல்வி அடைந்தனர்.

2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

இந்நிலையில், தில்லியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க ஆயத்தமாகி வரும் பாஜக, அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்துகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய ரசாயனம், உரங்கள், சுகாதாரம் நலத்துறை அமைச்சா் ஜெபி நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

முதல்வர் போட்டியில், அரவிந்த் கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்சுரி ஸ்வராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோர் உள்ளனர்.

மேலும் மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, பாஜக எம்பி மனோஜ் திவாரி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT