முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்   கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

அதிமுக விவகாரம்: செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஈரோடு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லாதது குறித்து அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகளிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையன் வீட்டுக்கு 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக இரு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் தமது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆதரவாளர்களுடனான ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எது மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனின் செயல்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே என் வீட்டில் தொண்டர்கள் கூடுவது வழக்கமானதுதான். ஆலோசனை ஏதுவும் நடைபெறவில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

SCROLL FOR NEXT