தற்போதைய செய்திகள்

ஆந்திரம்: பறவைகள் கண்காட்சி திடலில் தீ விபத்து!

பறவைகள் கண்காட்சி திடலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக...

DIN

விஜயவாடாவில் உள்ள சிதாரா மைய கண்காட்சி திடலில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சிதாரா மைய திடலில் பறவைகள் கண்காட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இக்கண்காட்சி திடலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அங்கிருந்த உள்ளுர் மக்கள் உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உடனியாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் முன்வைத்த 12 கேள்விகள்!

சமையல் எரிவாயு உருளை வெடித்ததால் இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று காவல் துறையினர் முதல்கட்ட தகவலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பறவைகளும், பெரிய அளவிலான நெருப்புக்கோழியும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT