கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

சிறையில் செல்போனுடன் பிடிபட்ட விசாரணைக் கைதி!

தானே சிறையில் செல்போன் வைத்திருந்த விசாரணைக் கைதியைப் பற்றி...

DIN

மகாராஷ்டிர மாநிலத்தின் தானே சிறையில் செல்போனை பதுக்கி வைத்திருந்த விசாரணைக் கைதி ஒருவர் பிடிபட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தானேவிலுள்ள மத்திய சிறையில் சுமார் 200 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும், புதிய 3 வது வளாகத்தில் கடந்த டிச.30 அன்று சிறை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, கடந்த 2023 ஆம் ஆண்டு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் பரஸ்மல் சேத்தியா (வயது-38) என்பவரது ஒரு செருப்பு மட்டும் காணவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிறை அறையில் காவலர்கள் தேடியப்போது அவரது மற்றொரு செருப்பு கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையும் படிக்க: 'ஓராண்டு போதும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும்' - ஒமர் அப்துல்லா

ஆனால், அது வழக்கத்தை விட அதிக எடையோடு இருந்ததினால் அதனை பிரித்து பார்த்ததில் அதனுள் அவர் செல்போன் ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைக்குள் செல்போன் எப்படி வந்தது என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

SCROLL FOR NEXT