தற்போதைய செய்திகள்

ஜி.வி. பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன்: டீசர் எப்போது?

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் கிங்ஸ்டன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் கிங்ஸ்டன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார். இப்படத்துக்கு கிங்ஸ்டன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பேச்சிலர் திரைப்படத்தில் நடித்த திவ்யபாரதி, கிங்ஸ்டன் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரே இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

கடலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்படுகிறது. மீனவராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

இந்த நிலையில், கிங்ஸ்டன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசர் ஜன. 9 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT