திருப்பதி செல்வோருக்கு முகக்கவசம் கட்டாயம் 
தற்போதைய செய்திகள்

திருப்பதி செல்வோருக்கு முகக்கவசம் கட்டாயம்: தேவஸ்தானம்

எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு.

DIN

எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி திருமலையில் வைகுண்ட வாயில் தரிசனத்துக்காக அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதால் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: தில்லியில் வென்றால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ் வாக்குறுதி!

இலவச டோக்கன்

திருப்பதி திருமலையில் வைகுண்ட வாயில் தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள் நாளை( ஜன. 9) காலை 5 மணிக்கு வழங்கப்பட உள்ளது.

ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாயில் தரிசனத்துக்காக திருப்பதி மற்றும் திருமலையில் சா்வதரிசன டோக்கன்கள் ஜன. 10 முதல் 19 வரை வழங்கப்படும்.

ஜனவரி 10, 11, 12 ஆகிய முதல் மூன்று நாள்களுக்கு ஜன. 9-ஆம் தேதி காலை 5 மணி முதல் 1.20 லட்சம் இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அதைத் தொடா்ந்து வரும் நாள்களுக்கு முந்தைய நாள் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 10 நாள்களில் டோக்கன் இல்லாத பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT