மாநகரப் பேருந்து (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

பொங்கல்: ஜன. 10 - 13 வரை கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கம்.

DIN

பொங்கல் திருநாளை முன்னிட்டு, 10.01.2025 முதல் 13.012025 வரை கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

14.01.2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய 4 நாள்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்ற மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்கள் / பகுதிக்கு மாநகர் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 10.012025 முதல் 13.012025 ஆகிய 4 நாள்களுக்கு இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT