தற்போதைய செய்திகள்

காட்டுப் பன்றியை சுட்டுப்பிடிக்க வனத்துறைக்கு அனுமதி!

காட்டுப் பன்றியை சுட்டுப்பிடிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

DIN

விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

காட்டுப் பன்றிகளின் தொல்லையால் விளை நிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

”காட்டுப் பன்றிகளிடம் இருந்து விவசாயிகளைக் காக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு சில பரிந்துரைகளைக் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் அரசாணை தயார் செய்து நேற்று(ஜன. 9) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இதையும் படிக்க: கலங்கரை விளக்கம் - நீலாங்கரை இடையே கடல் பாலம்: அமைச்சர் எ.வ. வேலு

அதன்படி, காப்புக்காட்டிலிருந்து 1 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிக்கு வரும் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதியில்லை. காப்புக்காட்டிலிருந்து 1 கி.மீ. - 3 கி/மீ. தொலைவு வரை உள்ள பகுதிக்கு வரும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து திருப்பி அனுப்ப வேண்டும். அதற்காக வனத்துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

காட்டுப் பன்றிகள் 3 கி.மீ.-க்கு அப்பால் வருமானால் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளே காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்” என்று பொன்முடி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT