தமிழக பாஜகவுக்கு அடுத்த புதிய தலைவர்கள் தேர்வுகளில் இவர்களில் யார்?  
தற்போதைய செய்திகள்

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?

தமிழக பாஜகவில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17 ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

தமிழக பாஜகவில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17 ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக தேசிய தலைமை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்தி, அதற்கேற்ப மாநிலத் தலைவர்கள் மற்றும் கட்சி கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக பாஜக தலைமை பொறுப்பாளர்களை நியமிக்கும்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு இன்னும் ஒன்றைரை ஆண்டுகளில் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பாஜக மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி வரும் 17 ஆம் தேதி சென்னை வருகிறார்.

சென்னையில் இரண்டு நாள்கள் தங்கும் கிஷன் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த மாநிலத் தலைவர் தொடர்பான அறிக்கையை கட்சி தலைமையிடம் அளிப்பார் என்றும் அதற்கு பின்னர் தமிழக பாஜக தலைவரை பாஜக தேசிய தலைமை அறிவிக்கும் என கூறப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் பெயர்ப் பட்டியலில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பையைப் புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வருகை!

அழகு பட்டாம்பூச்சி... கௌரி கிஷன்!

அனுஷ்காவுக்கு திருப்புமுனை கிடைக்குமா?

சத்தீஸ்கரில் ஆசிரியரைக் கடத்தி கொன்ற நக்சல்கள்!

சீனாவில் பிரதமர் மோடி

SCROLL FOR NEXT