கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

ஜம்மு: கண்ணிவெடித் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீரில் கண்ணிவெடித் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்ததைப் பற்றி...

DIN

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்மாநிலத்தின் ரஜௌரி மாவட்டத்தில் இன்று (ஜன.14) வழக்கமான ரோந்து பணிகளில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலை 10.45 மணியளவில் நவ்ஷெரா பகுதியிலுள்ள கம்பா கோட்டை அருகில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியின் மீது படைவீரர் ஒருவர் அறியாமல் மெதித்துள்ளார்.

இதில், தூண்டப்பட்டு அந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர்கள் 6 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 2015-ல் காவலரைத் தாக்கிய நபருக்கு 1 ஆண்டு சிறை!

இதனைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பெற்று வரும் அவர்கள் 6 பேரது உடல் நிலையும் தற்போது சீராக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, எல்லைக்கோட்டில் சட்டவிரோதமாக யாரேனும் உள்ளே வராமல் தடுப்பதற்காக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும். மழைக்காலங்களில் அவை அங்கிருந்து மழை நீரில் அடித்து வரப்படுவதினால் இதுமாதிரியான விபத்துகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கத்தில் கொடூர தாக்குதல்- பாஜக எம்.பி.யிடம் ஆளுநா், முதல்வா் நேரில் நலம் விசாரிப்பு

மேற்கு வங்கம்: மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல்- வெள்ள நிவாரணப் பணியில் சம்பவம்

செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

பள்ளிக் கல்வித் துறை அறிவிப்புகள் டிசம்பருக்குள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

பிகாா் எதிா்க்கட்சி கூட்டணியில் 40 தொகுதிகளைக் கேட்கும் இடதுசாரி கட்சி- 19 தொகுதிகளை ஏற்க மறுப்பு

SCROLL FOR NEXT