தற்போதைய செய்திகள்

பிக் பாஸ் 8: பணப்பெட்டியை எடுக்க முயன்று வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!

நடிகை ஜாக்லின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுக்க முயன்ற ஜாக்லின், குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வராததால் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி வாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளன.

தற்போது பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ரயான் ஆகிய 6 பேர் உள்ளனர்.

வழக்கமாக பணப்பெட்டியை எடுப்பவர் பணத்தை எடுத்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்.

ஆனால், பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்த சீசனில் பணப்பெட்டியை எடுப்பவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் மீண்டும் வீட்டுக்குள் வந்துவிட்டால் போட்டியில் தொடரலாம் என்றும் மாறாக குறித்த நேரத்துக்குள் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் மீண்டும் வரவில்லை என்றால் பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: டிராகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்த நிலையில் முதல் நாள் நடைபெற்ற பணப்பெட்டி போட்டியில் 30 மீட்டர் தொலைவில் ரூ.50,000 பணம் வைக்கப்பட்டு இருந்ததை 15 விநாடிகளில் முத்துக்குமரன் எடுத்தார்.

தொடர்ந்து ரூ. 2 லட்சத்துக்கான பணப்பெட்டியை ரயான், பவித்ரா ஆகியோர் எடுத்தனர். ரூ. 5 லட்சத்துக்கான பணப்பெட்டியை விஜே விஷால் எடுத்தார். செளந்தர்யா பணப்பெட்டியை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, எடுக்க முடியாத்தால் மீண்டும் வீட்டுக்குள் வந்துவிட்டார்.

ஜாக்லின் வெளியேற்றம்

இன்று ரூ. 8 லட்சம் கொண்ட பணப்பெட்டி வைக்கப்பட்ட நிலையில், அதை எடுக்க 35 விநாடிகள் என நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஜாக்லின் 37 விநாடிகள் எடுத்துக் கொண்டதால் பிக் பாஸ் வீட்டின் கதவுகள் மூடப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் ஜாக்லின் வெற்றிப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து ஜாக்லின் வெளியேறியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT