தற்போதைய செய்திகள்

குறுகிய காலத்தில் சுபம்! இன்றுடன் நிறைவடையும் பிரபல தொடர்!

நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் நிறைவு...

DIN

நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் இன்றுடன்(ஜன. 17) நிறைவடைகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிவரும் தொடர் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்தத் தொடரில் நடிகர் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நாயகனாக நடித்த ஜெய் ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு இவர் நடித்த நீதானே என் பொன்வசந்தம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது.

இதேபோன்று பூவே பூச்சூடவா, அபி டெய்லர், கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ரேஷ்மா முரளிதரன்.

இதையும் படிக்க: லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் வெளியீட்டுத் தேதி!

இருவருக்கும் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் ஆரம்பம் முதலே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இருந்தாலும், நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் டிஆர்பியில் சற்று பின் தங்கியுள்ளதால் இத்தொடரை முடிக்க தொடர் குழு முடிவெடுத்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களேஆன நிலையில், இத்தொடர் நிறைவடையவுள்ளது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடிகை ரேஷ்மா முரளிதரன் நடித்த கிழக்கு வாசல் தொடர் குறுகிய காலத்திலேயே நிறைவடைந்த நிலையில், நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலும் 6 மாதத்திலேயே நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

SCROLL FOR NEXT