கார் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மலர்கள் வைத்து வழிப்படும் பொதுமக்கள் 
தற்போதைய செய்திகள்

கார் தாக்குதலில் 35 பேரைக் கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சீனாவில் கார் தாக்குதலில் 35 பேரைக் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது...

DIN

சீனாவில் கார் தாக்குதல் நடத்தி 35 பேரைக் கொலை செய்த 62 வயது நபருக்கு இன்று (ஜன.20) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சீனாவின் ஜூஹாய் மாகாணத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஃபான் வெய்குயி (வயது 62) என்ற நபர் தனது மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்தை தொடர்ந்து தனது சொத்துக்கள் பகிரப்பட்ட விரக்தியில், அங்குள்ள ஓர் விளையாட்டு மைதானத்தின் வெளியே பயிற்சி செய்து கொண்டிருந்த பொதுமக்களின் மீது தனது காரை செலுத்தி தாக்குதல் நடத்தினார். அந்த தாக்குதலில் 35 பேர் பலியான நிலையில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்பட்டது.

இதையும் படிக்க: வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய உத்தரவு!

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2024 டிசம்பர் மாதம் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உண்டாக்கியதற்காகவும், இந்த படுகொலையை நிகழ்த்தியதற்காகவும் ஜூஹாய் மக்கள் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில், அந்த தீர்ப்பு வெளியான ஒரு மாதத்திற்குள் இன்று (ஜன. 20) ஃபான் வெய்குயிக்கு சீன அதிகார்களால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீனாவில் பொது மக்களின் மீது நடத்தப்படும் தனிநபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இதுப்போன்று மொத்தம் 19 தாக்குதல்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT