மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த்தின் கல்லூரி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் ரூ. 13.7 கோடி மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்த்தின் கல்லூரியிலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மூன்று நாள்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ஏர் ஹார்ன்: ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை அளித்த போலீஸ்!
இந்த நிலையில், இன்று(ஜன. 21) எம்பி கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான கல்லூரியில் ரூ. 13.7 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்ததாகவும் கல்லூரியில் உள்ள லாக்கரை உடைத்து ரொக்க பணம் ரூ. 75 லட்சத்தை பறிமுதல் செய்ததாகவும் முக்கிய ஆவணங்களின் ஆதரவான பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தது உள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
சென்னை மட்டுமல்லாமல் வேலூரில் உள்ள காட்பாடி, பூஞ்சோலை ஆகிய பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.