கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

தெரு நாய்கள் கடித்து 3 வயது குழந்தை பலி!

உத்தரப் பிரதேசத்தில் தெரு நாய்கள் கடித்து குழந்தை பலியானதைப் பற்றி..

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் மதூராவில் தெரு நாய்கள் கடித்துகுதறியதில் 3 வயது குழந்தை பலியாகியுள்ளது.

மதூராவின் கொஸிகலான் பகுதியில் நேற்று (ஜன.22) மதியம் 3 மணியளவில் சோபியான் (வயது 3) எனும் சிறுவன் தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, திடீரென அங்கு வந்த 6 தெரு நாய்கள் அந்த சிறுவனை சூழ்ந்து கடித்து குதறி இழுத்து சென்றுள்ளன. இதனை, நேரில் கண்ட அங்கிருந்த மற்ற சிறுவர்கள் ஓடிச்சென்று சோபியானின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு வந்த குடும்பத்தினர் குச்சிகளால் அந்த நாய்களை விரட்டியுள்ளனர். ஆனால், அதற்குள் அந்த நாய்கள் தாக்கியதில் சோபியானின் உடல் முழுவதும் கடிக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மனைவியைக் கொன்று உடலை சமைத்த கணவர்!

பின்னர், உடனடியாக அந்த சிறுவனை அவனது குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, சோபியானின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களின் வீரியம் அதிகமாக இருந்ததினால் அந்த மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், போகும் வழியிலேயே சோபியான் பரிதாபமாக பலியானான்.

இந்த சம்வம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அப்பகுதி மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT