ரூ.3.38 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
தற்போதைய செய்திகள்

ரூ.3.38 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! ஒருவர் கைது!

மிசோரமில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தியவர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

DIN

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ரூ.3.38 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்த காவல் துறையினர் அதை கடத்திய ஒருவரை கைது செய்துள்ளனர்.

லவாங்டலாய் மாவட்டத்தின் துயிசாங் பாலத்தின் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படைகளான அசாம் ரைபில்ஸ் மற்றும் மிசோரம் காவல் படையினர் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 260 டப்பாக்கள் அளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதை கடத்தி வந்த சம்பாய் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த சிகரெட்டுகள் அனைத்தும் மியான்மர் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிக்க: டீ விற்றவரின் வதந்தியே மகாராஷ்டிர ரயில் விபத்துக்குக் காரணம்: அஜித் பவார்

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தும் அம்மாவட்டத்தின் ஹனஹ்தியல் காவல் துறையினரிடம் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகாக ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, மிசோரம் மாநிலத்தின் 6 மாவட்டங்கள் மியான்மர் நாட்டின் சின் மாநிலத்துடன் சுமார் 510 கி.மீ. நீளத்திற்கு எல்லையை பகிர்ந்துள்ளது. இதனால், மியான்மரில் இருந்து போதைப் பொருள்களும், ஆயுதங்களும் அம்மாநிலத்தினுள் எளிதாக கடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT