முதல்வர் ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பத்தரசன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சக்தி சோமையா (14) சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை(ஜன.24) பிற்பகல் பள்ளியின் மின்சார வயர்களில் ஏற்பட்ட மின்சார கசிவினால் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் சக்தி சோமையாவின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் சக்தி சோமையாவின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்!

இடம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு

மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

தமிழக புதிய டிஜிபியை தோ்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை: யுபிஎஸ்சி தகவல்

மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

SCROLL FOR NEXT