கூகுள் செயலியால் நேபாளத்திற்கு பதில் உ.பி. வந்தடைந்த வெளிநாட்டினர்!
கூகுள் செயலி காட்டிய வழியில் நேபாளம் செல்ல முயன்ற பிரான்ஸ் நாட்டினரைப் பற்றி..
கூகுள் மேப் செயலியின் உதவியால் நேபாளத்திற்கு சைக்கிள் மூலம் செல்ல முயன்ற 2 பிரான்ஸ் நாட்டினர் உத்தரப் பிரதேசத்தில் வழி தொலைந்துள்ளனர்.
கடந்த ஜன.7 அன்று விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா வந்த பிரயன் ஜாக்குவஸ் கில்பர்ட் மற்றும் செபாஸ்டியன் ஃபிரான்கோயிஸ் கேபிரியல் ஆகிய இருவர், கூகுள் மேப் செயலியின் உதவியோடு தில்லியிலிருந்து சைக்கிள் மூலமாக நேபாள தலைநகர் காத்மண்டுவிற்கு செல்லும் முயற்சியில் தங்களது பயணத்தை துவங்கியுள்ளனர்.
அந்த பயணத்தில் அவர்கள் உ.பியின் பிலிபிட் வழியாக காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கடந்த ஜன.23 பரேலி வழியாக ஓர் குறுக்கு வழி இருப்பதாக அந்த செயலி காட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து, செயலி காட்டிய பாதையை பின் தொடர்ந்து சென்ற அவர்கள் சுராய்லி அணைப் பகுதியிலுள்ள கிராமத்தில் வழி தொலைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து!
இந்நிலையில், அன்றிரவு 11 மணியளவில் ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான சாலையில் வெளி நாட்டவர் இருவர் சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி கிராமத்துவாசிகள் அவர்களை அனுகி விவரம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பேசிய மொழி புரியாததினால் அவர்கள் இருவரையும் சுராலி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு, அவர்களிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர் இருவரையும் அன்றிரவு அந்த கிராம ஊராட்சி தலைவரின் வீட்டில் தங்கவைத்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறை உயர் அதிகாரி அனுரக் ஆர்யாவின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை (ஜன.24) காலை இருவருக்கும் அவர்களது பயணத்திற்கு முறையான வழியைக் கூறப்பட்டு கிராமவாசிகளின் ஆராவாரத்துடன் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.